“ஆலோசனையிலிருந்து சம்மதம் வரை: இலங்கையின் கடல்சார் மற்றும் கரையோர நிர்வாகத்தில் சமூகங்களின் குரல்கள்” என்ற இந்த ஆவணம், நீர்கொழும்பு, ரேகவ, வாகரை, கற்பிட்டி மற்றும் விடத்தல்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூகங்களின் அனுபவங்களை பதிவு செய்வதுடன், வடக்கின் மன்னார் பகுதியை சேர்ந்த 186 மீனவ சமூகத்தினரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பையும் உள்ளடக்கியுள்ளது. 

கடலோர மற்றும் பழங்குடிச் சமூகங்கள் தங்களது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் விவகாரங்களில் தீர்மானிக்கும் சுய அதிகாரத்தை மிகக் குறைவாகவே கொண்டுள்ளன என்பதை இந்தச் சிக்கல் குறித்த சுருக்கறிக்கை (Issue Brief) சுட்டிக்காட்டுகிறது. “தீர்மானங்கள் நடைமுறையில் எடுக்கப்பட்ட பின்னரே தகவல்கள் பெரும்பாலும் சமூக உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன; தொழில்நுட்பத் திட்டமிடல்கள் உள்ளூர் சூழலியல் அறிவைத் தொடர்ச்சியாக உள்ளடக்குவதில்லை; மொழி மற்றும் நிர்வாகத் தடைகள் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகின்றன; மேலும் தங்களது நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் தீர்மானங்களைச் சவால் செய்யும் திறன் இச்சமூகங்களுக்குக் குறைவாகவே உள்ளது.”

பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் வெறும் பங்குதாரர்களாக (stakeholders) மட்டுமன்றி, உரிமை உடையவர்களாகவும் (rights-holders) தங்களது பிரதேசங்களின் முதன்மைப் பாதுகாவலர்களாகவும் (primary stewards) அங்கீகரிக்கப்பட வேண்டும். திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர், அவர்களின் அறிவும் சம்மதமும் அத்தீர்மானங்களை வடிவமைப்பதாக இருக்க வேண்டும்.